இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

Published By: Digital Desk 5

22 Mar, 2023 | 02:55 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையான தோல்வி அடைந்த இலங்கை , அதே அணிக்கு எதிராக மற்றொரு சவாலை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் (ICC Cricket World Cup Super League) தொடராக அமைவதாலேயே இலங்கை மற்றொரு சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்பற்றுவதற்கு இலங்கை நேரடி தகுதிபெறவேண்டுமானால் நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வசேத ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையாக வெற்றிபெறவேண்டும்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் அணிகள் நிலையில் முதல் 7 இடங்களில் இருக்கும் இங்கிலாந்து (155 புள்ளிகள்), நியூஸிலாந்து (150), வரவேற்பு நாடான இந்தியா (139), பங்களாதேஷ் (130), பாகிஸ்தான் (130), அவுஸ்திரேலியா (120) ஆப்கானிஸ்தான் (118) ஆகியன  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன.

எட்டாவதாக எந்த நாடு தகுதி பெறும் என்பதைத் தீர்மானிக்கும் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடரும் தென் ஆபிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான தொடரும் நடைபெறவுள்ளன.

அணிகள் நிலையில் 77 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 107 புள்ளிகளுடன் உலகக் கிண்ண பிரதான சுற்றில் நேரடியாக விளையாட தகுதிபெறும்.

இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அடையும் அதேவேளை, 78 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அதிகபட்சமாக 98 புள்ளிகளைப் பெற்று 8ஆவது நாடாக உலகக் கிண்ண பிரதான சுற்றுக்குள் நுழையும்.

தற்போது 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் 88 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் அவ்வணியின் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. ஒருவேளை, தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தலா 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

எனினும் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தும் என எதிர்பார்க்க முடியாது.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் 28ஆம்  திகதியும்   கடைசிப் போட்டி ஹெமில்டன் செடன் பார்க் விளையாடடங்கில் 31ஆம் திகதியும் நடைபெறும்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் விளையாடப்பட்டுள்ள 99 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 - 41 என நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது. 8 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

நியூஸிலாந்தில் இலங்கை 12 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 

கடைசியாக இரண்டு அணிகளும் 2019இல் நியூஸிலாந்தில் சந்தித்துக்கொண்டபோது 3 - 0 என்ற ஆட்டக்கணக்கில் நியூஸிலாந்து முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது.

தென் ஆபிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் செஞ்சூரியனில் மார்ச் 31ஆம் திகதியும் ஏப்ரல் 2ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45