சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

Published By: Sethu

22 Mar, 2023 | 02:08 PM
image

சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று புதன்கிழமைவான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் அலேப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேலினால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

'அதிகாலை 3.55 மணியளவில் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்குவைத்து இஸ்ரேலிய எதிரிகள் வான் வழித் தாக்குதல் நடத்தினர்' என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 

இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்பவியலாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என சிரியாவின் போக்குவரத்து அமைச்சு அதிகரிர சுலைமான் கலீல் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய வளாகத்தில் உள்ள, ஈரானிய ஆதரவுப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இக்களஞ்சியம் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 7 ஆம் திகதியும் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மூவர் உயிரிழந்ததுடன், விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிகமோசமான சூழ்நிலைகளிற்கு தயாராகுங்கள் - பாதுகாப்பு...

2023-06-01 16:27:18
news-image

அவுஸ்திரேலியாவின் மிகவும் கௌரவிக்கப்பட்ட இராணுவவீரர் ஆப்கானில்...

2023-06-01 13:12:33
news-image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உப...

2023-06-01 11:30:40
news-image

சீமான் உள்பட நாம் தமிழர் நிர்வாகிகளின்...

2023-06-01 10:01:18
news-image

இலங்கையிலிருந்து படகில் கொண்டுசெல்லப்பட்ட கடத்தல் தங்கம்...

2023-06-01 10:10:45
news-image

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பாலியல்வன்முறை குற்றச்சாட்டுகளை...

2023-05-31 20:24:01
news-image

சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடான் இராணுவம் இடைநிறுத்தியது

2023-05-31 15:35:11
news-image

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?...

2023-05-31 14:17:11
news-image

மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை...

2023-05-31 13:06:57
news-image

ரயானா உட்பட ஏஎக்ஸ்2 விண்வெளியாளர்கள் பூமிக்குத்...

2023-05-31 13:15:22
news-image

குடியேற்றவாசிகளிற்கு எதிரான பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்தார்...

2023-05-31 12:39:20
news-image

வட கொரியா ஏவிய உளவுச் செய்மதி...

2023-05-31 10:48:09