சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த தீர்மானத்தை எடுக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 5

22 Mar, 2023 | 03:19 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு ஆரம்பக்கட்ட படிக்கல்லாக உள்ளது. நாணய நிதியத்துடனான  ஒப்பந்தம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆகவே ஒரு சிறந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தின் ஊடாக எடுக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வரிச்சலுகை வழங்கியமை, உரம் தடை செய்தமை ஆகிய காரணிகளினால் பொருளாதார பாதிப்பு குறுகிய காலத்திற்குள் தீவிரமடைந்துள்ளது.தற்போது அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றிணைந்துள்ள காரணத்தால் உண்மையை மறைக்க முடியாது.

கடந்த காலத்தை பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தால் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தூரநோக்கு கொள்கையுடன் செயற்பட வேண்டும். சர்வதேச நாணய ஒத்துழைப்பு  பொருளாதார மீட்சிக்கு ஆரம்பக்கட்ட படிக்கல்லாக அமையும்.

இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது பொருளாதார பாதிப்பு ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்ட பின்னணியில் தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. 

ஆனால் 2020 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்ததன் பின்னர்,நாடு வங்குரோத்து என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பான நிபந்தனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு நிபந்தனை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் வெளிப்படை தன்மையுடுன் செயற்பட வேண்டும் என்பதற்காக  அறிக்கை பாராளுமன்றத்திற்கு முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச  நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கமற்ற வகையில் செயற்பட வேண்டும், ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57