டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன? - ஜாதிபதியிடம் விமல் கேள்வி

Published By: Vishnu

22 Mar, 2023 | 01:56 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும், லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) புதன்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றியதை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கேள்வியெழுப்பிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின்  நட்டமடையும்  அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக  ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது இலாபம் அடையும் நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும்? இவ்வாறான நிறுவனங்களை விற்கும் போது அதனை வெளிநாட்டவர் வாங்கினால் அவர்கள் இங்குள்ள பணத்தை டொலராக மாற்றியே கொண்டு செல்வார்கள்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பதை மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.ஆனால் மறுசீரமைப்பு பட்டியலில் லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமாக அரசாங்க பங்குககள் மற்றும் லங்கா வைத்தியசாலைக்கு சொந்தமான அரச பங்குகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் அல்லது அந்த நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பதன் நோக்கம் என்னவென்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும் என்றார்,

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23