கொழும்பு ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை முகாமைத்துவ குழுவுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை (18) முற்பகல் மாளிகாவத்தை செரண்டிப் உற்சவ மண்டபத்தில் 'நன்றியுணர்வு நாள்' நிகழ்வை நடத்தியது.
இந்த பாடசாலையில் கல்வி கற்று தற்போது ஏனைய பாடசாலைகளில் அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்று செல்லும் அதிபர் A. K. T அத்ஹான் அவர்களை கௌரவித்தல், புதிய அதிபர் எம். ஆர். ரிஸ்கி அவர்களை வரவேற்றல், இந்த பாடசாலையில் கல்வி கற்று தற்போது ஏனைய பாடசாலைகளில் அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களை கௌரவித்தல் மற்றும் பாடசாலையில் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கிய ஆசிரியர்களை கௌரவித்தல் போன்றன இந்த நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கல்லூரியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான எஸ். எஸ். யூ. ஜெய்னுல் ஆப்தீன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்லூரிகள் பழைய மாணவரும் நீர்கொழும்பு வெளிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபருமான எம். இஸட். ஷாஜஹான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM