புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் - சர்வதேச ஊடகத்திற்கு ரணில் பேட்டி -

Published By: Rajeeban

22 Mar, 2023 | 12:11 PM
image

சீனாவும் இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளும்  விரைவில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனா உட்பட உலக நாடுகள்விரைவில்இணக்கப்பாட்டிற்கு வராவிட்டால்  மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவியை வழங்கிய பின்னர் வழங்கியுள்ள முதல் பேட்டியில்ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான இணக்கப்பாட்டையும்  தனது நீண்டகால சீர்திருத்தங்களையும் 2022 இல் உணவு எரிபொருள் மருந்து வெளிநாட்டு நாணய நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்பதற்கான இறுதி வாய்ப்பு என ரணில்விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் இது தொடர்பான உடன்படிக்கைகள் சாத்தியமாவதை விரும்புகின்றேன் எதிர்பார்க்கின்றேன்  என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு எவ்வாறு முன்னோக்கி நகரவேண்டும் என்பது குறித்து  இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களுடனான இணக்கப்பாடு குறித்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் என்ன நினைக்கின்றேன் என்பதும் என்ன நடக்கலாம் என்பதும் இரண்டு வேறு காலஎல்லைகள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைய நிழல் யுத்தத்தில்  ஈடுபடவேண்டியிருக்கும்,என தெரிவித்துள்ள  ஜனாதிபதி இருதரப்பும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்த பொருள் பற்றாக்குறை அதிகரித்த பட்டினி அரசியல் அமைதியின்மை போன்றவை சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கான குறியீடாக இலங்கையை கடந்த வருடம் மாற்றின.

இலங்கை நிதியமைப்புகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் உலகளாவிய கடன்நெருக்கடிக்கு சர்வதேச கடன் வழங்குநர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதற்கான அளவு கோலாக மாறியுள்ளது.

குறிப்பாக சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது என்பது சர்வதேசத்தின் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளது.

சர்வதேநாணயநிதியம் ஆரம்பகட்ட நிதியாக 330 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

இலங்கை தனது கடனை சீரமைக்கும் விடயத்தில் எவ்வளவு  தூரம் முன்னேறுகின்றது என்பதை பொறுத்து எஞ்சிய நிதியை சர்வதேச நாணயநிதியம் வழங்கும்.

எனினும் இந்த உடன்படிக்கையை சாத்தியமாக்குவது தொடர்பான விடயங்கள் இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால்பட்டவையாக காணப்படுகின்றன.

இந்த விடயத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்றால்  இலங்கை தனக்கு  அதிகளவு  கடனை வழங்கிய சீனாவிற்கும் கடன்வழங்கிய ஏனைய நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கவேண்டியுள்ளது.

தனது நோக்கங்களிற்கு புவிசார் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி  திட்டம் குறித்த பேச்சுவார்தைகள் செப்டம்பரில் ஆரம்பமான போதிலும் சீனா இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான தனது எதிர்ப்பை வெளியிட்ட பின்னரே  நிதி உதவி கிடைப்பது சாத்தியமானது.

சீனாவிற்கு அதிகளவு கடனை வழங்கவேண்டிய கானா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளன.

சீனா இந்தியா ஜப்பான் ஆகிய இரு தரப்பு கடன்வழங்குநர்களிற்கு இலங்கை 40 பில்லியன் டொலர்களை வழங்கவேண்டியுள்ளது.

எங்கள் இருதரப்பு கடன்வழங்குநர்கள் ஒரு தளத்தில் ஒன்றிணைவார்களா அல்லது நாங்கள் சீனா மற்றும் பாரிஸ்கிளப் உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேசவேண்டுமா என்பதே முக்கியமான விடயம் எனவும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனா சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்துடன் உடன்வரும் என கருதுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04