WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி : நீக்கல் போட்டியில் மும்பை - UP வொரியர்ஸ்

Published By: Digital Desk 5

22 Mar, 2023 | 11:40 AM
image

(என்.வீ.ஏ.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை (21) நிறைவுபெற்ற லீக் சுற்றைத் தொடர்ந்து டெல்ஹி  கெப்பிட்டல்ஸ்  12 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மும்பை இண்டியன்ஸும் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 2ஆம் இடத்தில் இருப்பதுடன் UPவொரியர்ஸ் 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது.

இந் நிலையில் மும்பை இண்டியன்ஸும் UP வொரியர்ஸும் வெள்ளிக்கிழமை (24) நீக்கல் போட்டியில் விளையாடவுள்ளன. அதில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை ஞாயிறன்று எதிர்த்தாடும்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் அணி 4 விக்கெட்களாலும் UP வொரியர்ஸ் அணியை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 5 விக்கெட்களாலும் வெற்றிகொண்டிருந்தன.

மும்பை இண்டியன்ஸ் எதிர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எலிஸ் பெரி (29), ரிச்சா கோஷ் (29), ஸ்ம்ரித்தி மந்தனா (24) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் நெட் சிவர்-ப்றன்ட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஸி வொங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

அமெலியா கேர் (31), யஸ்டிகா பாட்டியா (30), ஹெய்லி மெத்யூஸ் (24) ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் கனிக்கா அஹுஜா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் எதிர் UP வொரியர்ஸ்

UP வொரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியதன் மூலம் மகளிர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான நேரடி தகுதியை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பெற்றுக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ரா அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவியும் மற்றொரு அவுஸ்திரேலிய வீராங்கனையுமான அலிசா ஹீலி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அலிஸ் கெப்சி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராதா யாதவ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி மெக் லெனிங் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 39 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 21 ஓட்டங்களையும் பெற்றதுடன் 29 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து மாரிஸ்ஆன் கெப் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் எலிஸ் கெப்சி 34 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினர்.

பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45
news-image

டோனிஅரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்...

2023-06-01 12:40:51