நாணய நிதிய உதவிகள் வாசல் கதவை திறந்துள்ளது; எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் - ஹாபிஸ் நசீர் அஹமட்

Published By: Nanthini

22 Mar, 2023 | 01:45 PM
image

ர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியதாவது:

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவியுள்ளது. 

இவ்வுதவியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பனவும் உதவ உள்ளன. அரசியல் நோக்கில் நாட்டின் நிலைமைகளை தலைகீழாக காட்டுவதற்கு சிலர் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், ஜனாதிபதியின் தலைமையில் சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இதனால்தான், இந்நிதியுதவிகள் எமக்கு கிடைத்துள்ளன. 

இனியாவது எதிர்க்கட்சிகள் அதிகார ஆசைகளை மறந்து மக்களின் பசி, பட்டினி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை போக்குவதற்கு முன்வர வேண்டும். இதற்காக ஜனாதிபதி எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் இவர்கள் ஆதரிப்பது அவசியம்.

தேர்தலை இலக்கு வைத்தோ, ஆசனங்களை குறிவைத்தோ செயற்படும் சூழல் இதுவல்ல. இதை கருதித்தான் அன்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பாரமேற்றார். அவரின் துணிச்சல் வீண்போகவில்லை.

இப்போது அடைந்திருப்பது சாதனையின் முதற்கட்டமே. இன்னும் பல கட்டங்களை கடந்து சாதிக்க வேண்டியுள்ளது. இவற்றை விரைவாக சாதிப்பதற்கே சகலரதும் ஒத்துழைப்பை கோருகிறோம். தனியே நின்று சாதிப்பதானால், பல வருடங்கள் தேவைப்படலாம். 

நாடு இன்றுள்ள நிலையில், இனியும் இதற்கான முயற்சிகள் கால விரயங்களாகக் கூடாது.

ஏனெனில், எஞ்சியுள்ள இந்த சாதனைகளே நடுத்தர மற்றும் அடிமட்ட பொருளாதாரத்தில் உள்ள குடும்பங்களை முன்னேற்றும். 

எனவே, எஞ்சியுள்ளவற்றை சாதிக்கவாவது, எதிரணிகள் ஒத்துழைப்பது அவசியம். சொந்த இலக்குகளை அடைந்துகொள்ளும் ஆசைகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டுப்பற்று மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபடுவதுதான் மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள பொறுப்பு. இப்பொறுப்புக்களில் ஒன்றிணைய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47