சி.ஐ.டி. என தம்மை அடையாளப்படுத்தியவர்களால் முல்லைத்தீவில் துணிகர திருட்டு

Published By: Priyatharshan

05 Jan, 2017 | 02:09 PM
image

முல்லைத்தீவு நகர், செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற நான்குபேர் கொண்ட குழுவினரால் 60 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



நேற்று நள்ளிரவு  வீட்டு நபருடைய பெயரைச்சொல்லி கூப்பிட்டபடி தாம் சி.ஐ.டி.  யினர்  எனவும் விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பில் தங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று நான்குபேரை கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.

அவர்களில் இருவர் வெளியில் நிற்கவே இருவர் வீட்டிற்குள் நுழைந்து "விடுதலைப்புலிகளின் பணத்தை பயன்படுத்தியே உங்களின் மகனை வெளிநாடு அனுப்பியுள்ளீர்கள்" என்று மிரட்டியுள்ளனர். அதற்கு வீட்டு உரிமையாளர் தான் வங்கி ஒன்றில் கடன்பெற்ற ஆவணங்களைக்  காட்டியுள்ளார். ஆவணங்களை பார்வையிட்ட சந்தேக நபர்கள் வீட்டை சோதனையிடவேண்டும் என்றுகூறி வீட்டிலிருந்தவர்களை வீட்டின்நடுவே அமர்த்திவிட்டு வீட்டை சல்லடை போட்டுள்ளனர்.

அதன்பின்பு வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டையினை வாங்கி கொண்டு "நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வருவோம்" என்று கூறி சென்றுள்ளார்கள். குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸ்  நிலையத்தில் நள்ளிரவே முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் நள்ளிரவு இரண்டுமணியளவில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார்கள். இதன்போது வீட்டில் பணம் ஏதாவது இருந்ததா என பொலிஸார்  வீட்டு உரிமையாளரைக்கேட்கவே பணமிருந்த இடத்தை வீட்டு உரிமையாளர் பார்த்துள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த  60 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளமை  தெரியவந்தது. 
இதேவேளை வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டை வீட்டுக்கு வெளியே வீசிக்காணப்பட்டதுடன் வீட்டிற்குள் வந்த இரு சந்தேக நபர்களில்  ஒருவர் தமிழில் சரளமாக பேசியதாகவும்  மற்றவர் சிங்களத்திலும் கொச்சைத்தமிழிலும் கதைத்தாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். 
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05