(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினருக்கு மேலதிகமாக அரசாங்க கட்சிகளின் குண்டர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான தீர்மானங்கள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக மக்கள் மீது அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்கு மேலதிகமாக தற்போது தமது கட்சிகளின் குண்டர்களை குழுக்களை பயன்படுத்தி சிவில் இராணுவத்தை அமைத்துக்கொண்டு செல்கிறது.
19 ஆம் திகதி திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மின் கட்டணத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது குண்டர்கள் குழு போராட்டம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
குண்டர் குழுவில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னாலேயே இந்த தாக்குதலை நடத்தினர். ஆனால் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவர்களிடம் இருந்து தப்பிச் செல்லுங்கள் என்றே கூறினர். ஆனால் பொலிஸார் அந்தக் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் இருக்கின்றார். ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதன்மூலம் அரசாங்கத்தின் குண்டர் குழுக்கள் திட்டமிட்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதே தெளிவாகின்றது.
இதற்கு முன்னர் எவரும் அடையாளம் காணமுடியாத இராணுவ சீருடை அணிந்தவர்களால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நாங்கள் மக்களை அணிதிரட்டி இதற்கு எதிராக போரட்டம் நடத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM