(நா.தனுஜா)
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்களவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பொலிஸாரும் பாதுகாப்புத்தரப்பினரும் பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றம், தொடர்ச்சியான மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளடங்கலாகக் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த ஆண்டு மார்ச் - ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டில் அமைதியின்மை நிலவியதாகவும், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களின் பதவி விலகலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சட்டவிரோதப்படுகொலைகள், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகள், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற சிறைச்சாலை நிலைவரம், தன்னிச்சையான கைதுகளும் தடுத்துவைப்புக்களும், நீதிமன்ற சுயாதீனத்தன்மையுடன் தொடர்புடைய பிரச்சினைகள், கருத்துவெளிப்பாடு மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான மட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மீதான இடையூறுகள், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பான கட்டுப்பாடுகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில் போதியளவு விசாரணைகள் இன்மை, இன-மத சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடந்த ஆண்டு இலங்கையில் பதிவாகியிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இம்மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொண்டது என்றும், இவற்றைப் பொறுத்தமட்டில் குறிப்பாக தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்கின்றது என்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு மேமாதம் 9 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதிப்போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM