(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்குவதற்காக முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் என்ன? அதனை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்போகின்றது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
அதனால் இந்த நிபந்தனைகளை பாராளுமன்றத்துக்கு விரைவாக சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தற்போது மக்கள் ஆணை இல்லாமை காரணமாக இந்த நிபந்தனைகளை சமர்ப்பிக்காமல் இருக்கிறது.
எனவே தேசிய முக்கியத்துவம் என கருதி பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது?. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மறுசீரமைப்புக்கு ஆளாகும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் யாது? ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நிபந்தனைகள் என்ன? அந்த ஒப்பந்தத்தை இவ்வாரம் இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?
மக்கள் ஆணை இன்மையால் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கம்,சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய தரப்புகளுடன் மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு மக்களின் ஆணையைப் பெறுவது எவ்வாறு? சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாத ஓர் நாட்டை ஜனநாயக நாடு என எவ்வாறு அழைக்க முடியும்?
அத்துடன் இந்த ஆண்டு தேர்தல் எதனையும் நடத்த அரசாங்கம் திட்டமிடவில்லையா? அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது தடவடையாகவும் திகதி குறிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நிதியமைச்சு தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்காமைக்கான காரணங்கள் யாது?
அரச அச்சகரால் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் கோரப்பட்ட தொகை எவ்வளவு? அவ்வாறு கோரப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவு தொகை அரச அச்சகத்திற்கு கொடுக்க வேண்டும்? அந்த தொகையை எப்போது மட்டில் கொடுக்க முடியுமாக இருக்கும்? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
புதிய வருமான வரிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம்,கடந்த 2 மாதங்களில் அரசுக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு? கடந்த காலத்தில் தொழில் வல்லுநர்களால் புதிய வருமான வரிச் சட்டத்தில் என்ன திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன? அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் சம்மதிக்கிறதா?. புதிய வருமான வரிச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்வதை எதிர்பார்ப்பதாக இருந்தால், அது எந்த முறையில் மேற்கொள்ளப்படும்? அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்களால் கோரப்பட்ட அறிக்கை மற்றும் அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் யாது?
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய இராணுவத் தளபதி அல்லது பொலிஸ் மா அதிபருக்குத் தெரியாது படைகள் பயன்படுத்தும் சீருடைக்கு இணையான சீருடை அணிந்து தடி ஏந்தி இருந்தவர்கள் யார்? குறித்த அறியப்படாத குழுவிற்கு கட்டளை பிறப்பித்தது யார்? இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் யாது?
கடந்த காலங்களில் போராட்டங்களைக் கலைக்க அரசாங்கம் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் பலர் உயிரிழந்தனர்.இரசாயன விஷ கலவையா இதற்கு காரணம்? அல்லது காலாவதியான கண்ணீர்ப்புகையை பயன்படுத்தியமையா இதற்கு காரணம்?
மேலும் 2022 மே 9 ஆம் திகதி அன்று அலரி மாளிகை அருகில்,2022 ஜூலை 13 ஆம் திகதி அன்று,பிரதமர் அலுவலகம் அருகில், 2023 பெப்ரவரி 26 ஆம் திகதி அன்று லிப்டன் சுட்டுவட்டத்திற்கு அருகில் மற்றும்,2023 மார்ச் 07 ஆம் திகதி அன்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைக் கலைக்க பயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் கண்ணீர் புகை குண்டுகளின் உற்பத்தி திகதிகள் மற்றும் காலாவதி திகதிகள் யாது?
குறித்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் கண்ணீர் புகை குண்டுகளின் தரத்தை உறுதி செய்ய முறையான ஆய்வக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதா? குறித்த பரிசோதனை அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது என்றால் ஏன் முடியாது?
மேலும் 15,000 CS Shells மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதா? இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு? என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM