ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
உக்ரேனுக்கு ஜப்பானின் தனது தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலென்;ஸ்கியை அவர் சந்திப்பார் என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், உக்ரேனுக்கு இறுதியாக விஜயம் செய்யும் ஜி7 நாடொன்றின் தலைவர் கிஷிதா ஆவார்.
நேற்று திங்கட்கிழமை இந்தியாவில் இருந்த ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிதா, டோக்கியோவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவர் இந்தியாவிலிருந்து போலந்துக்கு சென்றார். அங்கிருந்து உக்ரேனுக்கு செல்வதற்காக ரயில் ஏறினார் என செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனுக்கு விஜயம் செய்த பின்னர், உக்ரேனுக்கு பயணம் செய்யாத ஜி7 நாடொன்றின் தலைவராக ஜப்பானியப் பிரதமர் இருந்தார்.
தற்போது ஜி7 அமைப்புக்கு ஜப்பான் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜப்பானிய பிரதமர் கிஷிடா உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM