செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? - மைத்திரி கேள்வி

Published By: Digital Desk 3

21 Mar, 2023 | 05:13 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

ஊடகங்களை கண்காணிக்க வேண்டுமாயின் காலையில் பத்திரிகை செய்திகள் ஊடாக பொய்களை   மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களையும் கண்காணிக்க வேண்டும்.

ஊடகங்களுடன் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை பாராளுமன்றத்திற்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் வரை செல்வது அவசியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சியத்த ஊடக நிறுவனத்தின் டெலிவெகிய நிகழ்ச்சி தொடர்பில்  எடுக்கப்படும் நடவடிக்கை பாரதூரமானது. நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திட்டமிட்டு என்னை ஊடகங்கள் விமர்சித்து செய்திகளை வெளியிட்டன. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதும்  பொய்யான செய்திகள் பல வெளியாகுகின்றன.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக ஊடகங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினேன்,அது எனக்கு எதிராக அமைந்தது. என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது பாராளுமன்றத்திற்குள் ஒரு தீர்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களை கண்காணிக்காமல் ஒட்டுமொத்த ஊடகங்களை கண்காணிக்க வேண்டுமாயின் காலையில் பத்திரிகை செய்தி வாசித்து பொய்யான கருத்துக்களை சமூக மயப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அரசாங்கத்திற்கு அது முடியுமா என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57