உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி ஏற்றுமதியாளராக இந்தியா மாறும் : அமித் ஷா

Published By: Vishnu

21 Mar, 2023 | 04:58 PM
image

(ஏ.என்.ஐ)

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதன் மூலம் திருப்தி அடையாமல், மிகப்பெரிய பால் ஏற்றுமதியாளராக மாறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய பால் சங்கத்தின் 49வது பால் தொழில் மாநாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பால் உற்பத்தி உச்சி மாநாட்டில்  கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எங்கள் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 126 மில்லியன் லீட்டர் ஆகும். இது உலகிலேயே அதிகம். 1970 முதல் 2022 வரை, இந்தியாவின் மக்கள்தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. 

ஆனால் பால் உற்பத்தி பத்து மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருப்பதில் நாம் திருப்தி அடையக்கூடாது. உலகின் மிகப்பெரிய பால் ஏற்றுமதியாளராக மாறுவதற்கு நாம் பாடுபட வேண்டும். இரண்டாவது வெண்மை புரட்சி தேவை. அந்த திசையில் நாங்கள் செயல்படுகிறோம். நரேந்திர மோடி அரசாங்கம் எந்த வாய்ப்பையும் விடாது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய பால் துறை ஆண்டுக்கு 6.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு கிராமங்களில் 2 இலட்சம் பால் கூட்டுறவு சங்கங்களை நிறுவுகிறது. அது நடந்தால் பால் துறையின் வளர்ச்சி 13.80 சதவீதமாக உயரும். இந்தியாவின் பங்கு உலகளாவிய பால் உற்பத்தி 33 சதவீதமாக இருக்கும். நமது பால் ஏற்றுமதி தற்போதைய அளவை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும்.

பால்வளம் என்பது உலகத்திற்கே ஒரு தொழில். ஆனால் இந்தியாவில் 9 கோடி குடும்பங்கள் நேரடியாக பால் பண்ணையுடன் இணைந்திருப்பதால், அது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகவும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வதற்கும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் உதவுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59