மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அரச நிர்வாகத்தை நிர்வகிக்கிறார் - டிலான் பெரேரா

Published By: Digital Desk 5

21 Mar, 2023 | 03:55 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நிறைவேற்றுத்துறையை மாத்திரமன்றி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்கின்றார்.

பொருளாதாரம், ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் ,நிதி ,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள்  மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறல்  தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்,

கிரிக்கெட் தொடரில் ரோயல் கல்லாரி வெற்றியடைந்த போது அந்த அணியின் தலைவர் செய்ததை போன்று தானும் நாட்டுக்கு வெற்றியை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

ஆனால் ரோயல் கல்லூரி தலைவர் சுற்றுப்போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சிறப்பாக விளையாடியவர். ஆனால் ஜனாதிபதி அனைத்திலும் தோல்வியடைந்தவர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும் சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளையும் ஆட்சி செய்கின்றார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை அவர் ஆளுநர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஊடாக ஆட்சிபுரிகின்றார். மாற்றத்தை கோரியவர்களுக்கு இறுதியில் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது என அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிதியுதவி ஊடாக நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்கப் பெறுமாயின் அதனை முழுமையாக வரவேற்போம்,ஆனால் இந்த நிதி உதவி ஊடாக மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் பெறாது, மாறாக நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் தள்ளப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54