'தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Ponmalar

21 Mar, 2023 | 03:49 PM
image

நடிகர் ஆனந்த் நாக் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்' எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் பி. எம். ரத்தினவேல் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்'. இதில் ஆனந்த் நாக், தளபதி தினேஷ், ஓ ஏ கே சுந்தர், கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சீனு ஆதித்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை டீம் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பி. எம். ரத்தினவேல் தயாரித்திருக்கிறார்.

ஏப்ரல் 6 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் தலைக்கவசத்தில் ஒரு ரகசிய விடயம் அமைந்திருக்கிறது. இதனை துரத்திக் கொண்டு கும்பல் ஒன்று அவர்களை துரத்த.. அவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் அணிவகுத்து தேட.. கதையின் நாயகர்களான நால்வரும் தலைக்கவசத்திற்குள் இருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஓடுகிறார்கள். இவர்கள் ஓட்டம் சுவாரசியமாக இருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51