முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளும் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாக துமிந்த சில்வாவுக்கு எதிராக இந்த வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.