வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

Published By: Ponmalar

21 Mar, 2023 | 03:44 PM
image

கடந்த 2020 ஆம் ஆண்டை விட தற்போது வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கிறது என அண்மைய ஆய்வின் ஆய்வின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் முழுவதுமாக ஏற்படவில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய முகத்தில் உள்ள உதடுகள், நாக்கு, கன்னத்தின் உள்பகுதி, பற்களின் வேர்பகுதி, நாக்கின் உள்பகுதி, ஈறுகளின் வெளி மற்றும் உள்பகுதி ஆகிய இடங்களில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால், அதனை வாய் புற்றுநோய் என மருத்துவ நிபுணர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

உதட்டு பகுதியில் ஏற்படும் புண் குணமடையாமல் இருப்பது, வாயின் உள்பகுதியில் வெள்ளை நிற அல்லது சிவப்பு வண்ண திட்டுகள் காணப்படுவது, பற்கள் இயல்பான வலுவில் இருந்து குறைந்து பலவீனமாக இருப்பது, வாய்ப்பகுதியில் ஏதேனும் ஓரிடத்தில் கட்டி தோன்றுவது, வாய் வலி, காது வலி, உண்ணும் போது உணவை விழுங்குவதற்கு சிரமப்படுவது, ஈறு பகுதிகளில் புண்கள் ஏற்பட்டிருப்பது, அதிலிருந்து ரத்தக் கசிவு உண்டாவது... போன்ற அறிகுறிகள் தோன்றினால்., அவை புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

புகைப்பிடித்தல், பாக்கு மற்றும் புகையிலையை பாவித்தல், மது அருந்துதல், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல் திறன் இயல்பான அளவைவிட மிகவும் குறைந்திருத்தல்.. போன்ற காரணங்களால் வாய் புற்றுநோய் ஏற்படும்.

இதன் போது திசு பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, எண்டோஸ்கோபி பரிசோதனை போன்றவற்றின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சைகளின் மூலமாக முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். புற்றுநோய் பாதிப்பின் தன்மையை பொறுத்து சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ரசாயன சிகிச்சை போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கி இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை, வாழ்க்கை நடைமுறை ஆகியவற்றை மூன்றாண்டுகள் வரை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். மேலும் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும்.

டொக்டர். அஸ்வின்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29