உலக தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற 'அகநக..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இந்திய சினிமாவின் நட்சத்திர அடையாளமாக திகழும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரானது.
இதில் முதல் பாகத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்த அந்தத் திரைப்படத்திற்கு இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றது. அத்துடன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற ஆவலையும் தூண்டியது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று 'பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்' உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெற்ற 'அகநக..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த பாடலை, பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்திக்கும், இளைய பிராட்டி குந்தவை நாச்சியாராக நடித்திருக்கும் திரிஷாவுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி மெல்லிசையாக உருவாகி இருக்கிறது. இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பின்னணியிசை பணிகளை இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் ஈடுபட்டிருக்கும் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM