35 வருடகால அரச கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

Published By: Ponmalar

21 Mar, 2023 | 01:21 PM
image

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய திருமதி. கலையரசி யோகநாதன் தனது  அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பதுளை கலைமகள் நடராஜன், இராஜாம்பாள் தம்பதிகளின் புதல்வியாவார். தனது பள்ளி வாழ்க்கையை பதுளை உர்சலாஸ் நர்சரி பள்ளியில் ஆரம்பித்து, தொடர்ந்து பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், கண்டி மோபிரே மகளிர் கல்லூரியிலும், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

இவர் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி சிறப்புப் பட்டத்தினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும், தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முகாமைத்துவ முதுமாணி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கும் இவர் 1987ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தார். 1999ஆம் ஆண்டு கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி அச்சேவையில் உள்ளீர்க்கப்பட்டார். ஊவா மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் தமிழ் மொழி மூலமான முதலாவது கல்வி அதிகாரி என்ற பெருமையும் இவரைச் சார்ந்ததாகும். அதனைத் தொடர்ந்து இவர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உபஅதிபராகவும், பதுளை ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதுளை வலயக் கல்விப் பணிமனையில் 9 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இணைந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து 2015 முதல் 2021 வரையான காலப்பகுதியில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சின் மேலதிகக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்து பணியாற்றினார்.

இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கையின் முதன்மை ஆசிரியராகவும் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார். மனிதாபிமானத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்ற இவர் பெண் தலைமைத்துவத்திற்கு ஓர் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். மலையக கல்வி வளர்ச்சிக்காக சேவையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள இவரை, தனது ஓய்வு காலத்தில் தன் குடும்பத்தாருடன் சிறப்புடன் வாழ கல்விச் சமூகம் வாழ்த்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08