(நெவில் அன்தனி)
மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய UP வொரியர்ஸ் அணி, மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கு 3ஆவது அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.
தயாளன் ஹேமலதா, ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத் ஜயன்ட்ஸை பலப்படுத்தினர்.
ஹேமலதா 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட சொஃபியா டன்க்லி 23 ஓட்டங்களையும் லோரா வுல்வார்ட் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பார்ஷவி சொப்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஜேஷ்வரி கயக்வாட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்க 7 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
தஹ்லியா மெக்ரா, க்றேஸ் ஹெரிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
தஹ்லியா மெக்ரா 11 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து க்றேஸ் ஹெரிஸும் சொஃபி எக்லஸ்டோனும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர். க்றேஸ் ஹெரிஸ் 41 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்தார்.
வெற்றிக்கு மேலும் 3 ஓட்டங்கள் தேபைப்பட்டபோது இல்லாத 2ஆவது ஓட்டத்தை எடுக்க முயற்சித்து சிம்ரன் ஷய்க் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். எனினும் அடுத்த பந்தில் எக்லஸ்டோன் பவுண்டறி விளாச UP வொரியர்ஸ் வெற்றியீட்டியது.
எக்லஸ்டோன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கிம் கார்த் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM