19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் : ஜயவர்தனவின் சதத்தின் உதவியுடன் பங்களாதேஷை வென்றது இலங்கை

Published By: Digital Desk 5

21 Mar, 2023 | 09:18 AM
image

(நெவில் அன்தனி)

அபுதாபி டொலரன்ஸ் ஓவல் மைதானத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மும்முனை இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் சினேத் ஜயவர்தன குவித்த சதத்தின் உதவியுடன் பங்களாதேஷை 5 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடத்தாடிய இலங்கை 44.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹிருன் கப்புருபண்டாரவும் சினேத் ஜயவர்தனவும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கப்புருபண்டார 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் சினேத் ஜயவர்தன மேலும் 43 ஓட்டங்களை 2ஆவது விக்கெட்டில் தினுர கலுபானவுடனும் அணித் 36 ஓட்டங்களை 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஷெவன் டெனியலுடனும் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.

கலுபான 10 ஓட்டங்களையும் டெனியல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 203 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்னேத் ஜயவர்தன 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஹிரான் ஜயசுந்தர 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் நுழைந்த மல்ஷா தருபதி முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசி இலங்கை இளையோர் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். விஷ்வா ராஜபக்ஷ 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஜிஷான் அலாம் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பங்களாதேஷ் இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் சார்பாக துடுப்பெடுத்தாடி 9 வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தத்தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

அணித் தலைவர் அஹ்ரார் அமின் 50 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 40 ஓட்டங்களையும் சௌதுர் மொஹமத் ரிஸ்வான் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட ரோஹானத் தவுல்லா போர்சன் (19 ஆ.இ.), அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி (18), ஆரிபுல் இஸ்லாம் (17), மொஹமத் ஷிஹாப் ஜேம்ஸ் (16), பர்வெஸ் ரஹ்மான் ஜிபொன் (14) ஆகியோரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

சவ்தரி மொஹமத் ரிஸ்வானும் ஜிஷான் அலாமும் 2ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் அஹ்ரார் அமினும் ரொஹானத் தவுல்லா போர்சனும் 8ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் மல்ஷா தருபதி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கருக்க சன்கேத், ட்ரவின் மெத்யூ, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சினேத் ஜயவர்தன

144ஆவது நீலவர்ணங்களின் சமரில் விளையாடிய சினேத் ஜயவர்தன (றோயல்), லவர்ஸ் குவாரல் சமரில் விளையாடிய மல்ஷா தருபதி (றிச்மண்ட்), தினுர கலுபஹன (மஹிந்த) ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமையன்று அபு தாபி சென்றடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26
news-image

"இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட...

2023-06-01 14:03:45
news-image

டோனிஅரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்...

2023-06-01 12:40:51
news-image

20 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர்...

2023-06-01 09:41:55
news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29