டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு சமாந்தரமாக எரிபொருள் விலை, மின் கட்டணத்தை குறைக்க முடியும் - சம்பிக ரணவக்க

Published By: Vishnu

20 Mar, 2023 | 09:30 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்பவற்றிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறும். இவ் உதவிகளின் அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் பட்சத்தில் எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்பவற்றிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறும். இது சாதகமான சமிஞ்ஞை ஆகும். எவ்வாறிருப்பினும் மறுபுறம் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் போது கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

நாட்டில் பல்வேறு வழிமுறைகளிலும் டொலருக்கான கேள்வி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு கடன்கள் மீள செலுத்தப்படுவதில்லை. இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பாவனைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக இதற்கு முன்னர் எரிபொருள் கொள்வனவிற்கு பாரிய செலவு காணப்பட்டது. எனினும் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்சாலைதுறைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாகவும் டொலருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் மத்திய வங்கியின் நிதி கொள்வனவுடன் டொலரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய டொலரின் பெறுமதியை தொடர்ந்தும் 200 - 300 ரூபாவாகப் பேண முடியும் எனக் குறிப்பிட முடியாது. இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டாலோ அல்லது எரிபொருள் உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கப்பட்டாலோ டொலரின் பெறுமதி நிச்சயம் மீண்டும் உயர்வடையும். எவ்வாறிருப்பினும் இந்த நிலைமைகளின் அடிப்படையில் எரிபொருள் மற்றும் மின் கட்டணத்தை குறிப்பிட்டளவு குறைக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38