மேல் மாகணத்திற்குட்பட்ட சில பிரதேசங்களில் அதிகளவான டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேல்மாகாணத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி பெரேரா

மேல் மாகணத்தின் சில பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது கழிவுப் பொருட்கள் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. நுகேகொடை,மொரட்டுவை,கொலன்னாவ,தெஹிவளை ஆகிய பிரதேசங்களிலேயே டெங்கு அபாயம் நிலவுவதாக தெரியவருகிறது.

சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து சோதனை செய்யும் சந்தரப்பங்களில் மக்கள் தமது குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதாகவே தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் நாம் சுகாதார அமைச்சின் கீழ் ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் விரிவான டெங்கு கட்டுப்பாட்டு திட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் தற்போது செயற்பாட்டிலிருக்கும் செயலணிக்குழுவானது அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் 15 மாவட்டங்களை தெரிவு செய்து அவற்றின் பிரதேச செயலகங்களுக்கூடாக இந்த திட்டத்தினை மேற்கொள்ளும். அத்துடன் இவ்வருட ஆரம்பத்திலிருந்து தற்போது வரை அனைத்து பிரதேசங்களிலிருந்தும் சுமார் 26,243 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள . எனவே மூன்று நாட்களுக்கு ஆலோசனை பெறுவதும் மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.