(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம், பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துக்கான சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி குறித்த இறுதி அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (21) வெளியாகவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 4 வருடகாலத்தில் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.
அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
அதன் ஓரங்கமாக கடன் மறுசீரமைப்புக் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன்வழங்குனர்கள் அனைவரும் இலங்கைக்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான உதவிச்செயற்திட்டம் குறித்த ஆவணம் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி அனுமதிக்காக அதன் பணிப்பாளர் சபையிடம் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி உரிய விடயங்கள் ஆராயப்பட்டு, இலங்கைக்குக் கடனுதவியை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த இறுதித்தீர்மானம் இன்றைய தினம் (21) அறிவிக்கப்படவுள்ளது.
அதற்கமைய சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரீயர் மற்றும் இலங்கைக்கிளைத்தலைவர் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் இன்று காலை (21) சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் இறுதித்தீர்மானம் குறித்து ஊடக சந்திப்பொன்றின் மூலம் அறிவிக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது, இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வலுவானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதற்கும் பங்களிப்புச்செய்யுமென சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் தாம் ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளனர் சபை நிச்சயமாக அனுமதி வழங்குமென அரசாங்கம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM