உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை  - பொதுஜன பெரமுன

Published By: Vishnu

20 Mar, 2023 | 05:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். 

உள்ளுராட்சி மன்றங்கள் அரச அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மாநகர சபை ஆணையாளர்களிடமும், பிரதேச சபை செயலாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவாக நடத்தப்பட வேண்டும்என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

தேர்தல் இடம்பெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும்.தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு கிடையாது.யாருக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38