logo

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 

Published By: Vishnu

20 Mar, 2023 | 04:26 PM
image

மக்கள் வங்கி அரச, அரை அரச மற்றும் அதிகார சபைகள் பிரிவில் சிறந்த முகாமைத்துவ நிர்வாக நடைமுறைகளுக்கான வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வங்கி, சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 இல் (Best Management Practices Company Awards 2023)முகாமைத்துவ நிர்வாக நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்காக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

வங்கியானது அரச, அரை அரச மற்றும் அதிகார சபைகள் பிரிவில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் புத்தாக்கத்தின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணுகின்றமைக்கு சான்று பகருகிறது. இவ்விருது வழங்கும் வைபவம் 2023 மார்ச் 16 அன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் உள்ள கிராண்ட் போல்ரூமில் நடைபெற்றதுடன், இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் என்பது இலங்கையின் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ முகாமையாளர்களால் (Certified Professional Managers of Sri Lanka)  வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். விருதுக்கான மதிப்பீட்டுச் செயல்பாட்டில் எழுத்துபூர்வ சமர்ப்பிப்பு மற்றும் ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவிற்கு வாய்வழி மூலமான விளக்கம் வழங்கல் ஆகியவை அடங்கும். மக்கள் வங்கியின் சுருக்கமான மற்றும் வாய்மொழி விளக்கத்தை கவனமாக மதிப்பீடு செய்ததன் மூலம், அது தனது பிரிவில் தலைசிறந்தது என அங்கீகரிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவரான திரு. சுஜீவ ராஜபக்ஷ அவர்கள், இந்த அங்கீகாரத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன் வங்கி ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். 

“எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கு அயராது உழைக்கும் எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு இந்த விருது ஒரு சான்றாகும். இதை அடைய, தொழில்துறை சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வங்கித் துறையில் புதிய தர அளவுகோல்களை நிர்ணயிப்பதில் தொடர்ந்து சிறந்து விளங்க முயற்சிப்போம்,” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஃபொது முகாமையாளருமான திரு.கிளைவ் பொன்சேகாவும் வங்கியின் சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள் 2023 இல், அரச, அரை-அரச மற்றும் அதிகார சபைகள் பிரிவில் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 

இந்த விருது, உயர்ந்த தரமான சேவை மற்றும் புத்தாக்கங்களை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான மற்றும் இடையறாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்டார். 

மக்கள் வங்கியினால் பெறப்பட்ட அங்கீகாரமானது, முகாமைத்துவ நடைமுறைகளில் சிறந்து விளங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right