மதுவரி திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான வருமானம் 35 வீதத்தால் குறைவடையக்கூடும் - மதுவரி திணைக்களம்

Published By: Digital Desk 3

20 Mar, 2023 | 05:20 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மதுவரி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 35  வீதத்தால் குறைவடையக்கூடும் என மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் வருமானத்தை 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 12.5 வீத வருமானம் குறைவடைந்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு 217 மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளபோதிலும், அதன் 65 வீதத்தை மாத்திரமே வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுபானங்களை சட்ட  ரீதியில் விற்பனை செய்யும் நடவடிக்கை குறைவடைந்துள்ளமையே மதுவரி திணைக்களத்தின் வருமானம் குறைவடைவதற்கான  பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் சட்ட ரீதியற்ற மதுபான விற்பனையானது 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19