தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பணிப்பெண் கைது : மகள், மருமகனும் சிக்கினர்!

Published By: Vishnu

20 Mar, 2023 | 03:37 PM
image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ஏ.ரி.எம் அட்டையிலிருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை  மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் பணிப்பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் பணிப்பெண்ணின் மகள் மற்றும் மருமகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

11 வருடங்களாக வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த குறித்த பெண்ணிடம்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  முன்னாள் வங்கி அதிகாரி  தனது  பணத்தேவையின் பொருட்டு தனது  ஏரிஎம்  அட்டை  மற்றும் அதன் பின் இலக்கத்தை கொடுத்து நோய்க்கான சிகிச்சைக்கு பணத்தை எடுத்துச்  செலவிடுமாறு தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, குணமடைந்து வீட்டுக்கு வந்த பின்னர் தனது வங்கி அட்டை மூலம்  50 இலட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தமையையடுத்து பொலிஸில்   முறைப்பாடு செய்துள்ளார்.

தனது வங்கிக் கணக்கில்   ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்ததாகவும், இரண்டு பிள்ளைகளுக்கும் தலா 50 இலட்சம் ரூபாவை கொடுத்து மீதிப் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையில், சந்தேக நபர், வங்கியின் முன்னாள் அதிகாரியின் ஏரிஎம் அட்டையைப் பணன்படுத்தி  ஆறு மாதங்களாக பணம் எடுத்தமை தெரிய வந்துள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-24 10:35:54