உலகத் தலைமையை இந்தியா ஏற்கும் - கயானா ஜனாதிபதி வாழ்த்து

Published By: Nanthini

20 Mar, 2023 | 03:55 PM
image

(ஏ.என்.ஐ)

உலகளவில் தானிய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

மேலும், சர்வதேச தானிய ஆண்டைக் குறிக்கோளாகக் கொண்டு செல்வதில் உலகத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று வருகிறது என்று கயானாவின் ஜனாதிபதி முகமது இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார்.  

உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் உணவு பாதுகாப்புக்கான சவால்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவின் முயற்சியை பாராட்டிய அவர், இந்தியா தனது 'சேவை நிபுணத்துவத்தை' வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கயானா அரசாங்கம் பிரத்தியேக தானிய உற்பத்திக்காக 200 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

தானிய உற்பத்திக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் இந்திய அரசாங்கம் தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்கும். 

நாம் பசியை எதிர்த்துப் போராடலாம். ஒவ்வொரு சாத்தியமான வாய்ப்பையும் ஆராய்வதன் மூலம் வேளாண் உணவு முறையை மாற்றலாம் என்றார்.

இந்தியாவின் முன்மொழிவின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்தது.

இந்தியாவை 'தானியங்களுக்கான உலகளாவிய மையமாக' நிலைநிறுத்தவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள், நுகர்வோர் போன்றோரும் தானிய உற்பத்தியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52