புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

Published By: Nanthini

20 Mar, 2023 | 03:53 PM
image

ஆண்களுக்கான பிரத்தியேக சுரப்பி புரோஸ்டேட் சுரப்பி ஆகும். உயிரணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் இந்த சுரப்பி, ஆண்களிடத்தில் சிறுநீர்ப்பைக்கு கீழே அமையப் பெற்றிருக்கிறது. 

முதுமையின் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இந்த சுரப்பி விரிவடைந்து வீக்கமடைகிறது. இதன் காரணமாக சிறுநீர் வெளியேற்றத்திலும், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தின் செயற்பாடு ஆகியவற்றில் தடைகளும் குறைபாடுகளும் உண்டாகிறது. 

இது நோயாளிக்கு பாரிய உடல் நல பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இதற்கு தற்போது சத்திர சிகிச்சைகள், லேசர் தெரபி, வாட்டர் வேஃபர் தெர்மல் தெரபி என நவீன சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு எழுதல், சிறுநீர் கழிப்பதில் குறைபாடு, வெளியேறும் சிறுநீரின் வேகம் குறைதல் அல்லது சிறுநீர் இடையில் நின்று நின்று வெளியேறுவது அல்லது சிறுநீர் கழித்த பிறகு இறுதியில் துளித்துளியாக வெளியேறுதல்,  சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் முழுமையாக வெளியேறாதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பினைன் புரோஸ்டேடிக் ஹைபர் ப்ளேசியா எனப்படும் தீங்கற்ற புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணரலாம்.

உடனடியாக மருத்துவரை சென்று சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். மருத்துவர்கள் இதன்போது சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை, ஆசனவாய் வழியாக பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

இதன்போது பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் உங்களுடைய வயது, உடல் ஆரோக்கியம், புரோஸ்டேட் சுரப்பியின் அளவு மற்றும் அதன் விரிவாக்கம், பாதிப்பின் வீரியம் ஆகியவற்றை அவதானித்து சிகிச்சைகளை தீர்மானிப்பர். 

இதற்கு மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதன் பிறகும் பாதிப்பின் அறிகுறிகள் தொடர்ந்தால் அவர்களுக்கு Transurethral Resection of the Prostate, Transurethral Incision of the Prostate, Transurethral Microwave Dharmo Therapy, Laser therapy, Water Vapour Thermal Therapy, Robotic Water Jet Treatment ஆகிய சத்திர சிகிச்சைகள் மற்றும் நவீன சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

- டொக்டர் குரு பாலாஜி

(தொகுப்பு - அனுஷா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்ப்பப்பையின் சீரான வளர்ச்சிக்கு...

2023-06-01 13:55:37
news-image

நுரையீரல் ஆரோக்கியம் குறித்த கவனம் அவசியமா..?

2023-06-01 12:12:45
news-image

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

2023-06-01 11:53:03
news-image

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் வலிப்பு நோய்!

2023-05-31 11:39:46
news-image

வெப்ப பக்கவாத பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2023-05-30 12:26:34
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40