லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா லயன்ஸ் - வேர்ல்ட் ஜயன்ட்ஸ்

Published By: Vishnu

20 Mar, 2023 | 03:14 PM
image

(நெவில் அன்தனி)

கத்தார், தோஹாவில் நடைபெற்றுவரும் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியும் ஏசியா லயன்ஸ் அணியும் விளையாட தகுதிபெற்றுள்ளன.

இந்த இறுதிப் போட்டி தோஹா, வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

மூன்று அணிகள் பங்குபற்றும் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் சுற்றுப் போட்டியில் 3 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 2ஆம் இடத்தைப் பெற்ற ஏசியன் லயன்ஸ் அணியும் ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 3ஆம் இடத்தைப் பெற்ற இண்டியா மஹாராஜாஸ் அணியும் இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெறும்பொருட்டு நீக்கல் போட்டியில் பங்குபற்றின.

அப் போட்டியில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்க குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் ஏசியன் ஜயன்ட்ஸ் 85 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஏசியன் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.

உப்புல் தரங்க (50), மொஹமத் ஹபீஸ் (38), அஸ்கர் அப்கான் (34), திலக்கரட்ன டில்ஷான் (27), திசர பெரேரா (24) ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டனர்.

இண்டியா மஹாராஜாஸ் பந்துவீச்சில் ப்ரகியன் ஓஜா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷ்டுவர்ட் பின்னி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இண்டியா மஹாராஜாஸ் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவர் கௌதம் கம்பிர் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 32 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மொஹமத் ஹபீஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சொஹெய்ல் தன்விர் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துர் ரஸாக் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திலக்கரட்ன டில்ஷான் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இஸுரு உதான 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஷஹித் அப்றிடி 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டி

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியும் ஏசியா லயன்ஸ் அணியும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக அமையும என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளிலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசத்திய மூன்னாள் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

அணிகள்

ஏசியா லயன்ஸ்: ஷஹித் அப்றிடி (தலைவர்), உப்புல் தரங்க, திலக்கரட்ன டில்ஷான், மொஹமத் ஹபீஸ், அஸ்கர் அப்கான், திசர பெரேரா, அப்துல் ரஸாக், ஷஹித் அப்றிடி, மிஸ்பா உல் ஹக், சொஹெய்ல் தன்விர், பராஸ் கத்கா, அப்துர் ரஸாக், இசுறு உதான, மொஹமத் அமிர், ஷொயெப் அக்தார்.

வேர்ல் ஜயன்ட்ஸ்: ஆரோன் பின்ச் (தலைவர்), யக் கலிஸ், ஹஷிம் அம்லா, ஷோன் வொட்சன், கிறிஸ் கெய்ல், கெவின் ஓ'ப்றயன், லெண்ட்ல் சிமன்ஸ், சமித் பட்டேல், மோர்னி நிக்கோ வென் வைக், கிறிஸ்டோபர் எம்போவு, ரொஸ் டெய்லர், ரிக்கார்டோ பவல், டினோ பெஸ்ட், மொன்டி பனீசார், போல் கொலிங்வூட், ப்றெட் லீ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-21 18:38:21
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04