சோதிட நிபுணர்களை சந்தித்து, எம்முடைய ஜாதகத்தை காண்பித்து பலன் கேட்பதும், அவர்கள் பரிந்துரை செய்யும் வழிகளில் பயணித்து வாழ்வில் வெற்றி பெறுவதும் எமது வாழ்வின் வெற்றிக்கான வழிகளில் ஒன்று என்பது இயல்பாகிவிட்டது.
ஆனால், சிலருக்கு எந்த சோதிட நிபுணர்களாலும் துல்லியமான பலன்களை அவதானித்து சொல்ல முடிவதில்லை. இதற்கு அவர்கள் பின்பற்றும் சோதிட பலன்களுக்கான இலக்கணங்களை வகுத்திருக்கும் சோதிட பிரிவுகள்தான் காரணம்.
பாரம்பரிய ஜோதிடம், மரபணு ஜோதிடம், நாடி ஜோதிடம் என ஏராளமான சோதிட பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜோதிட பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகளும் இருக்கின்றன. குறிப்பாக, நாடி ஜோதிடத்தில் அகத்தியர் நாடி ஜோதிடம், அகத்தியர் ஜீவநாடி ஜோதிடம், சுக பிரம்ம ரிஷி நாடி ஜோதிடம், சப்தரிஷி நாடி ஜோதிடம், பிருகு நந்தி நாடி ஜோதிடம், நாடி ஜோதிடம், நாடி சம்ஹிதை, பிருகு நாடி சம்ஹிதை, சந்திரகலா நாடி ஜோதிடம், சகாதேவா நாடி ஜோதிடம் என ஏராளமான நூல்கள் நாடி ஜோதிடத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் தொன்மையான மற்றும் முதன்மையான நாடி ஜோதிடம், ஈஸ்வர நாடி ஜோதிடம் ஆகும்.
இந்த ஈஸ்வர நாடி ஜோதிடத்தை சிவபெருமான் பார்வதிக்கு உபதேசித்ததாகவும், இதற்கு அகத்திய மாமுனிவர் எழுத்து வடிவம் அளித்ததாகவும் 1920ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஈஸ்வர நாடி ஜோதிடம் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், ஈஸ்வர நாடி ஜோதிடம் சூரிய காண்டம், சந்திர காண்டம், செவ்வாய் காண்டம், புதன் காண்டம், சுக்கிரன் காண்டம், சனி காண்டம் என ஏழு காண்டங்களை கொண்டிருக்கிறது.
இந்த நாடி ஜோதிடத்தில் சூரிய காண்டம் எனும் பகுதியில் மேஷ லக்னத்திலிருந்து ஒவ்வொரு லக்னத்திலும் சூரியன் இருந்தால் என்ன பலன் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பலன்கள் இன்றைய திகதியிலும் ஜாதகர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும் வகையில் இருப்பது தான் வியப்பை அளிக்கிறது.
இந்த நாடி ஜோதிடம் மூலமாக பலன் சொல்வதில் அண்மையில் பிரபலமாகி இருக்கும் நாடி ஜோதிடம் பிருகு நந்தி நாடி ஜோதிடமாகும்.
இந்த ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை குறித்த பலன்கள் துல்லியமாக இருக்கிறது என சோதிடர்களும் பயனாளிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மேலே குறிப்பிட்ட பல்வேறு நாடி ஜோதிட முறைகளில் ஈஸ்வர நாடி ஜோதிடம் தனித்துவமானது.
ஜோதிடத்தை பொருத்தவரை சம்பவ கால நிர்ணயம், வாக்குப் பலிதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஈஸ்வர நாடியை பொருத்தவரை இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜோதிட குறிப்புகள் பயனாளிகளுக்கு நூறு சதவீதம் துல்லியமான பலன்களை சொல்கிறது. உதாரணத்துக்கு ஒரு ஜாதகரின் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் புத்திர தோஷம் என்று பொதுவான பலனை சோதிடர்கள் முன்வைப்பார்கள்.
ஈஸ்வர நாடியில் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தாலும், அது புத்திர தோஷமாக இருந்தாலும், அந்த இடத்தை கோச்சார குரு ஏழாம் பார்வையாகவோ அல்லது சுப பார்வையாகவோ பார்வையிட்டால், அவர்களுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறப்புண்டு என குறிப்பிடுகிறது.
எனவே, நீங்கள் இதற்கு முன்னர் எத்தனையோ ஜோதிட முறைகளில் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பலன்களை கேட்டிருந்தாலும், அதற்குரிய பரிகாரங்களை மேற்கொண்டிருந்தாலும், அதனால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், ஈஸ்வர நாடி ஜோதிடத்தை அணுகி, உங்கள் ஜாதகத்தை அலசினால் உங்களுக்கான தீர்வு கிடைக்கும்.
- சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM