விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடாத்தப்பட்ட பாரிய தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக செய்யப்பட்டமுறைப்பாட்டை விசாரணை செய்யச்சென்ற பொலிஸார் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடாத்தியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினர் சிவகீர்த்தி எனத் தெரியவருகிறது. இவரிடமிருந்து கிரனைட் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தின்போது அவர் மது போதையிலிருந்ததாக தெரிய வருகிறது.
படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன் சுபசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான புஸ்பகுமார ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM