தாய்வானின் முன்னாள் ஜனாதிபதி மா யிங் ஜோ அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என அவரின் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்தில், தாய்வானின் ஆட்சியிலுள்ள அல்லது முன்னாள் தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
எனினும், அவர் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும், சீன அரச அதிகாரிகளை அவர் சந்திப்பதற்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை எனவும் அப்பேச்சாளர் கூறியுள்ளார்.
தாய்வான் தன்னை இறைமையுள்ள தனி நாடாக கருதகிறது. ஆனால், அதை தனது ஒரு பிராந்தியம் என சீனா கருதுகிறது.
1949 ஆம் ஆண்டு சீன உள்நாட்டு யுத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வென்றதையடுத்து, சீனாவின் தேசியவாதிகள் தாய்வானுக்கு தப்பிச் சென்று ஆட்சியமைத்தனர்.
தாய்வானில் சீனாவுக்கு நட்பான குவாமிங்டாங் கட்சியைச் சேர்ந்தவர் மா யிங் ஜியோவ். 2008 முதல் 2016 வரையான அவரின் ஆட்சிக்காலத்தில் இரு தரப்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டது. சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் மா யிங் ஜியோவுக்கும் இடையிலான உச்சி மாநாடு 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவருக்கு பின்னர் தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி பசாய் இங் வென் பதவியேற்ற பின்னர், சீன தாய்வான் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM