மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிசார் 18 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்தனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இருவரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.
இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிசார் கைது செய்ததோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM