இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடும்போக்கு சீக்கிய பிரச்சார் ஒருவரை அதிகாரிகள் தேடும் அதிகாரிகள், அவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 112 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இத்தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக தேடுதல்கள் தொடர்ந்த நிலையில் குறைந்தபட்சம் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 வயதான அம்ரித்பால் சிங் என்பவரே தேடப்படுகிறார். சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் நாடு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இவர் கோரி வருகிறார்.
கடந்த மாதம் அம்ரித்பால் சிங்கும் அவரின் ஆதரவாளர்களும் வாள்கள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்திச் சென்று, பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டனர்.
தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி தொடர்பில் தனது உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமையே இதற்கான காரணம்.
இந்நிலையில், அம்ரித்பால் சிங் தேடும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் 78 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டம், ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுப்பதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM