இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

Published By: Digital Desk 5

20 Mar, 2023 | 12:09 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடர்களின் 2ஆவதும் கடைசியுமான போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2 - 0 என முழமையாகக் கைப்பற்றியது.

மேலும் இந்தப் போட்டியுடன் 2021 - 2023 சுழற்சி காலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் லீக் சுற்று நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று திங்கட்கிழமை (20) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 358 ஓட்டங்களாக இருந்தது.

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த குசல் மெண்டிஸும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காமல் இருந்த ஏஞ்சலோ மெத்யூஸும் இன்று காலை துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

குசல் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்ததுடன் ஏஞ்சலோ மெத்யூஸ் மேலும் ஒரு ஓட்டத்தை எடுத்து 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான 1ஆவது டெஸ்டின் 4ஆம் நாளன்று ஆட்டம் இழக்காமல் சதங்கள் குவித்து இலங்கையை தோல்வியிலிருந்து மீட்ட ஏஞ்சலோ மெத்யூஸும் குசல் மெண்டிஸும் இந்தப் போட்டியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இலங்கையின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாயிற்று.

அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமாலும் தனஞ்சய டி சில்வாவும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து தனஞ்சய டி சில்வாவும் நிஷான் மதுஷ்கவும் 6ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஒரே மொத்த எண்ணிக்கையில் (318) இருவரும் ஆட்டம் இழந்தனர்.

நிஷான் மதுஷ்க 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 98 ஓட்டங்களையும் பெற்றனர்.

கசுன் ராஜித்த 2 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்தின் வெற்றியைத் தாமதித்த வண்ணம் இருந்தார். 3ஆம் நாள் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் நிறைவசெய்யப்பட்டிருந்தபோதிலும் இலங்கையின் கடைசி ஜோடி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்ததால் போட்டியில் ஒரு முடிவை காணும்பொருட்டு மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

அதற்கு அமைய வீசப்பட்ட முதலாவது ஓவரின் கடைசிப் பந்தில் கசுன் ராஜித்த 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்து அபார வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: 580 - 4 விக். டிக்ளாயார்ட் (கேன் வில்லிம்சன் 215, டெவன் கொன்வே 78, ஹென்றி நிக்கல்ஸ் 200 ஆ.இ., கசுன் ராஜித்த 126 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 164 (திமுத் கருணாரட்ன 89, தினேஷ் சந்திமால் 37, மெட் ஹென்றி 44 - 3 விக்., மைக்கல் ப்றேஸ்வெல் 50 - 3 விக்.)

இலங்கை (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 358 (தனஞ்சய டி சில்வா 98, தினேஷ் சந்திமால் 62, திமுத் கருணாரட்ன 51, குசல் மெண்டிஸ் 50, நிஷான் மதுஷ்க 39, கசுன் ராஜித்த 20, டிம் சௌதீ 51 - 3 விக்., ப்ளயார் டிக்னர் 84 - 3 விக்., மைக்கல் ப்றேஸ்வெல் 100 - 2 விக்.)

ஆட்டநாயகன்: ஹென்றி நிக்கல்ஸ்.

தொடர்நாயகன்: கேன் வில்லியம்சன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35