பதுளை - பசறையில் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து : இளம் ஆசிரியர் பலி

Published By: Digital Desk 3

20 Mar, 2023 | 12:21 PM
image

பதுளை- செங்கலடி வீதியின்,  பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று(20) காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த ஆசிரியர் பரணிதரன் (வயது -39) பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வருவதுடன், பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பஸ் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பிரதேச மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08