ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் ஆப்கான் பொதுமக்களை கொலை செய்தமை தொடர்பில் அவுஸ்திரேலிய படைவீரர் ஒருவரை கைதுசெய்துள்ள அதிகாரிகள் அவருக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின்SAS படையணியை சேர்ந்த என்றOliver Schulz படைவீரரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நியுசவுத்வேல்சில் இவரை அவுஸ்திரேலிய நியுசவுத்வேல்ஸ் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஆப்கானை சேர்ந்த ஒருவரை இவர் கொலை செய்தார் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர்ஆப்கானில் அவுஸ்திரேலிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யுத்த குற்றத்திற்கான அதிகூடிய தண்டனை ஆயுள்தண்டனை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானின் உருஸ்கன் மாநிலத்தில் கோதுமை தோட்டத்தில் கையை உயர்த்தியபடி வீழ்ந்து கிடக்கும் நபர் ஒருவரை ஒலிவர் சுடுவதை காண்பிக்கும் வீடியோக்களை ஏபிசிவெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ள முதலாவது அவுஸ்திரேலிய படைவீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM