மத்திய ஆபிரிக்கக் குடியரசில் 9 சீனப்பிரஜைகள் நேற்று கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு திறக்கப்பட்ட தங்கச் சுரங்கமொன்றின் மீது ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தினர். இச்சுரங்கம் சீனாவினால் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
பம்பாரி நகரிலுள்ள இச்சுரங்கத்தின் மீது நேற்று அதிகாலை 5.00 மணியளவில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் பாதுகாப்பு ஊழியர்களை தாக்கிவிட்டு, துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதாக பம்பாரி நகர மேயர் அபேல் மெட்டிபட்டா தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி பிராங்சுவா பொஸிஸேவடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிசிபி எனும் இயக்கத்தின் மீது சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
எனினும். இக்குற்றச்சாட்டை சிபிசி இயக்கத்தின் பேச்சாளர் மமாதோ கவ்ரா நிராகரித்துள்ளதுடன், ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்.
ரஷ்யர்களுக்கு முன்னர் மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு வந்த சீனர்களை அச்சுறுத்துவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் இராணுவப் பயிற்சிக்காகவும் ரஷ்ய கூலிப்படையை மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஜனாதிபதி பவுஸ்டின் ஆர்சேஞ் டோவாதேரா வரவழைத்திருந்தார். ஆனால், அவர்கள் கூட்டுப்படுகொலைகள் உட்பட மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐநா கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்னனர்.
சீனப்பிரஜைகளை கொலை செய்தவர்களுக்கு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM