ரஸ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஸ்யஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்பாரத விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஒருவருட கால யுத்தத்தில் தனது படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு புட்டின் விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை
சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து சில நாட்களிற்கு பின்னர் மேற்கொண்ட இந்த விஜயத்தின் மூலம் அவர் தான் அந்த பிடியாணையை அலட்சியப்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளார்.
மரியுபோலிற்கு ஹெலிக்கொப்டர் மூலம் சென்ற விளாடிமிர் புட்டின் அந்த நகரை காரில் சுற்றிபார்த்துள்ளதை காண்பிக்கும் புகைப்படங்களை ரஸ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆச்சரியத்துடன் காணப்படும் பொதுமக்களை புட்டின் சந்திப்பதை பார்க்க முடிகின்றது.
நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முயலவேண்டும் என புட்டின் மரியுபோலை சேர்ந்த ஒருவரிடம் தெரிவிக்கின்றார்.
இந்த விஜயம் தன்னிச்சையானது என தெரிவித்துள்ள கிரெம்ளின் எனினும் இந்த விஜயம் எப்போது இடம்பெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.
இரவு நேரத்திலேயே புட்டின் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு இரவில் திருடன் மேற்கொண்ட விஜயம் இது என குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM