அதிரடிக்கு பெயர் பெற்ற இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கைகளுக்கு சரிவு

Published By: Digital Desk 5

20 Mar, 2023 | 09:25 AM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடிக்கு பெயர் பெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் தொடர்ச்சியான 2 போட்டிகளில் குறைந்த எண்ணிக்கைகளைப் பெற்று தலா ஒரு தோல்வியைத் தழுவியுள்ளன.

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 188 ஓட்டங்களுக்கு சுருட்டி 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இந்தியா, விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது போட்டியில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டு 10 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

இராண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா வெறும் 26 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

துடுபாட்டத்தில் விரர்த் கோஹ்லி (31), அக்சார் பட்டேல் (29 ஆ.இ.), ரவிந்த்ர ஜடேஜா (16), ரோஹித் ஷர்மா (13) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சோன் அபொட் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாதன் எலிஸ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்களால் வெற்றியீட்டி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில் மிச்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 சிக்ஸ்கள் 6 பவுண்டறிகள் உட்பட 66 ஓட்டங்களுடனும் டரவிஸ் ஹெட் 30 பந்துகளில் 10 பவுண்டறிகள் உட்பட 51 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதில் மிச்செல் மார்ஷ் 81 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

கே.எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 75 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்திருந்தனர்.

பந்து வீச்சில் மிச்செல் மார்ஷ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09