கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார் - கெவிந்து குமாரதுங்க

Published By: Nanthini

19 Mar, 2023 | 07:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படவில்லை. நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார். 

ஆகவே, அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஒரு மாணவன் தனது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரிமையை மறுக்கும் வகையில் தான் 2020ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்த தீர்மானத்தினால் சாதாரண மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டக் கல்லூரி பரீட்சை மொழி தொடர்பான பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தவறை பாராளுமன்றத்தின் ஊடாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆகவே, சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் தான் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை பாராளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்ய சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றவில்லை. முறையற்ற வகையில் செயற்பட்டார்; நாட்டுக்கு அழிவை மாத்திரம் மிகுதியாக்கினார்.

ஆகவே, இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 14:32:19
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31