(எம்.வை.எம்.சியாம்)
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசம் மற்றும் கிரிந்த, பலதுபான பகுதியில் இரு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை - திம்பிரிவெவ, கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் 3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (18) சனிக்கிழமை மாலை 6.46 மணியளவில் கிரிந்த - பலதுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 2.6 ரிச்டராக பதிவாகியுள்ளது.
இந்த இரு பகுதிகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அவை நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தகட்டோட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டோட்டுக்கும் இடையில் நேற்று பகல் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இலங்கையில் இயங்கிவரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளது.
நிலநடுக்கங்கள் இலங்கையில் அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டோட்டுக்கும் அதற்கு மேல் அமைந்துள்ள ஆசிய தட்டோட்டுக்கும் இடையிலான எல்லையில் 4-5 ரிச்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள நில அதிர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதேவேளை, பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களின் ரிச்டர் அளவினை நோக்கும்போது கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் 4க்கும் குறைவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், பாரியளவிலான நில நடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், 2, 2.5 அல்லது 3, 3.5 போன்ற சிறிய நில அதிர்வுகள் இடம்பெறலாம் என்றார்.
இன்றும், நேற்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM