(எம்.வை.எம்.சியாம்)
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டரில் செய்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் பழுதுபார்க்கபடவிருந்த ஜெனரேட்டர் இயந்திரமே தற்போது செயலிழந்துள்ளது.
எவ்வாறாயினும்,டீசல் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என்றும் அமைச்சர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நுரைசோலை அனல் மின்நிலைய மி ன் பிறப்பாக்கிகள் இவ்வாறு செயலிழந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது,எதிர்வரும் நாட்களில் மின்விநியோகம்; தடை படும் என மின்சார சபை சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM