(எம்.வை.எம்.சியாம்)
உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு மாணவர்களின் நாளாந்த செலவுக்காக மேலும் 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் கடன் வட்டி 25 வீதத்தை தாண்டியுள்ள நிலையில் வட்டியின்றி குறித்த கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 5,000 மாணவர்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.
தற்போது இலங்கை வங்கியினால் மாத்திரம் வழங்கப்படும் இந்த கடன் உதவி, எதிர்காலத்தில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியினாலும் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், இக்கடன் வழங்கலில் உயர்தர z புள்ளி எதிர்பார்க்கப்படும். அத்துடன் பாடநெறியின் காலத்துக்கு பொருத்தமான மதிப்பு போன்றனவும் கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM