தேர்தலை பிற்போட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும் - மஹிந்த தேசப்பிரிய

Published By: Nanthini

19 Mar, 2023 | 05:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும். 

தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சுத் திணைக்களம் ஆகிய தரப்பினரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளினால் உள்ளூராட்சி மன்றம் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பல நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளன.

தேர்தல் தொடர்பில் சகல தரப்பினரும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து ஒரு தீர்மானத்தை எடுத்து தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே மேலதிகமாக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்தால், அது பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தும். 

ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும். 

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

தேர்தல் இல்லாமல் அறிக்கை சமர்ப்பித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்க நேரிடும். அந்த தீர்மானம் எத்தன்மையில் அமையும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38