(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய யாப்பொன்றை தயாரிப்பதற்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய யாப்பொன்றை வரைபு செய்வதற்காக கட்சியின் செயற்குழுவில் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், இக்குழுவின் தீர்மானத்துக்கமைய இவ்வாறு மக்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
புதிய யாப்பு வரைபை தயாரிக்கும் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரபன்ன செயற்படுவதுடன், குழுவின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசங்க நாணயக்கார, குழு உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெல்பொல, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா ஆகியோர் செயற்படுகின்றனர்.
அதன் பிரகாரம், கட்சியின் புதிய யாப்பு தயாரிப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரமுடைய பிரதிநிதிகளுக்கும், கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு தயாரிப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவின் சட்ட பிரிவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் செயலாளரான நிசங்க நாணயக்கார அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM